1. Home
  2. தமிழ்நாடு

மேற்குவங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

1

மேற்கு வங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு, ஆசிரியர் பணியிட தேர்வு மூலம் அரசு உதவி பெறும் மற்றும் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, 9 முதல் 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் குரூப்-சி, குரூப்-டி ஊழியர்கள் என 25,753 நியமனங்களை ரத்து செய்து கடந்த 22-ஆம் தேதி உத்தரவிட்டது கொல்கத்தா உயர் நீதிமன்றம். சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டதாகக் கூறி மேற்கண்ட 24,000 பேரிடமும் அவர்கள் வாங்கிய சம்பளத் தொகையைத் திருப்பியளிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் (ஏப். 29) விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. எனினும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதெனவும் சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நேற்று (மே. 7) நடைபெற்றது. அப்போது மாநில அரசு தரப்பு மீது நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியது. ஆசியர் பணி நியமன விவகாரத்தில் நிர்வாக முறைகேடு நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், பணி நியமன விவரங்களை டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்த வேண்டும். ஆனால் அரசு அதைச் செய்யவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றது

Trending News

Latest News

You May Like