செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்! 10 நாள் தான் டைம்!

செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அபய் ஓகா மற்றும் அகஸ்டீன் ஜார்ஜ் மஷி ஆகியோர் அமர்வு, அமைச்சராக தொடர விரும்புகிறீர்களா என்பதை தெரிவிக்க கூறியிருந்தோம். ஆனால் தொடர்ந்து பதிலளிக்காமல் இருப்பது ஏற்புடையது அல்ல.
நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என்பதற்காக சலுகையாக எடுத்துக் கொள்வீர்களா? இந்த வழக்கில் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்னவாயின என கேள்வி எழுப்பியிருந்ததனர்.
அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்க 10 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அதற்கு மேல் கால அவகாசம் அளிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும். பதில் அளிக்க 10 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும். அதற்கு மேல் கால அவகாசம் அளிக்க முடியாது" என தெரிவித்துள்ளது.