1. Home
  2. தமிழ்நாடு

ராம நவமி, சிவராத்தியை பொது விடுமுறையாக அறிவிக்க தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு!

1

இந்தியாவில் ராம நவமி மற்றும் சிவராத்தி உள்ளிட்ட சிறப்பு நாட்கள் சில மாதங்களில் வர இருக்கிறது. அதில் ஏராளமான மக்கள் தங்களுடைய குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். இந்நிலையில் ராம நவமி, சிவராத்திக்கு பொது விடுமுறை விடுவது குறித்து அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் ராம நவமி, சிவராத்திக்கு பொது விடுமுறை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ராம நவமி, சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும், மனு தொடர்பாக மத்திய அரசை அணுக மனுதாரருக்கு சென்னை உய்ரநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கி இருக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like