பிபவ் குமாருக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டுக்கு கடந்த மே 13ம் தேதி தான் சென்றபோது, கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன் மீது தாக்குதல் நடத்தியதாக டெல்லி காவல்துறையில் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், டெல்லி காவல்துறையால் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி பிபவ் குமார் தாக்கல் செய்த மனு தாக்கல் செய்தார். சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம்!