1. Home
  2. தமிழ்நாடு

ஆம் ஆத்மி வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!

1

சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் குல்தீப் குமாரும், பாஜக சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. அதனால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

தொடர்ந்து பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்கால தடையும் கோரியது ஆம் ஆத்மி. அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகம் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரை காலவரையின்றி தள்ளிவைத்தது. தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசிஹ் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டது.

அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்கு முன்பே (பிப் 18) பாஜகவை சேர்ந்த சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென தனது ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் சண்டிகர் மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like