உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் புகுந்த வெள்ள நீர்.. அடைமழையில் தத்தளிக்கும் அசாம் !

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் புகுந்த வெள்ள நீர்.. அடைமழையில் தத்தளிக்கும் அசாம் !

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டில் புகுந்த வெள்ள நீர்.. அடைமழையில் தத்தளிக்கும் அசாம் !
X

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இல்லத்திற்குள் மழை நீர் புகுந்தது.

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். 

இந்நிலையில் அசாமின் பல இடங்களில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இல்லத்திற்குள் மழை நீர் புகுந்தது.

நீதித்துறையிலிருந்து நேரடி அரசியலுக்குள் நுழைந்துள்ள ரஞ்சன் கோகாய், அசாம் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 1978 ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய அவர், கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என படிப்படியாக வளர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியானார்.

கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற அவருக்கு தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. . இதற்கு ரஞ்சன் கோகாய் வீடும் தப்பவில்லை. திப்ரூகார்க் நகரில் உள்ள பல வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்ததால், சுமார் 25 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த மழைநீரானது உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்யின் வீட்டிற்குள் புகுந்தது. இல்லத்திலிருந்த கோகாய்யின் வயதான தாயார் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக திப்ரூகார்க் மாவட்ட துணை காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

newstm.in 

Next Story
Share it