சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் பட தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை ?

2014ம் ஆண்டு ரஜினிகாந்தின் நடித்த கோச்சடையான் என்ற அனிமேஷன் படம் வெளியானது. இந்த படத்தை அவரது மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்ட் செய்தார். படம் படுதோல்வி அடைந்தது.
இந்த படத்தை தயாரித்தது டாக்டர் முரளி மனோகரின் தயாரிப்பாளர் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்.
இந்நிலையில் நடிகர் ரஜினியின் கோச்சடையான் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கும், அபிர் சந்த் நாகர் என்பவருக்கும் ஒப்பந்தம் செயப்பட்டிருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அபிருக்கு திரைப்பட தயாரிப்பாளர் முரளி மனோகர் கொடுக்க வேண்டிய தொகை ரூ. 5 கோடிக்காக அளித்த காசோலை பணமில்லாமல் திரும்பியது.
இது தொடர்பாக அபிர் சந்த் நாகர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம் 9% வட்டியுடன் ரூ. 7.70 கோடியை அபிர் சந்த் நாகருக்கு வழங்க வேண்டுமென முரளி மனோகருக்கு உத்தரவிட்டது. மேலும் 6 மாத சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் சென்னை விரைவு நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து உத்தரவிட்டது.