1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி ட்வீட்..!

1

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களுக்கு பிறகு லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று  உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது.இந்தப் படத்தில் நடிகர் ரஜினி, மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். மேலும் லால் சலாம் திரைப்படமானது கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களம் என்பதால் பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். 

இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே தனுஷ் நடிப்பில் விஐபி 2 திரைப்படத்தையும் ரஜினி நடிப்பில் கோச்சடையான் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் வெற்றி அடைய இறைவனை வேண்டிக் கொள்வதாக நடிகர் ரஜினி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று தனது மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு இந்த பதிவினை வெளியிட்டுள்ளார் ரஜினி.


 

Trending News

Latest News

You May Like