அரசியல் தலைவர்களை அடுத்தடுத்து சந்திக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பு இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த் ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று துறவிகளை சந்தித்தார். தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு பாபாஜி குகையில் தியானத்தில் ஈடுப்பட்டார்.
இதையடுத்து கடந்த 17ஆம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த ரஜினிகாந்த் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு சென்று, அங்குள்ள துறவிகளை சந்தித்தார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னை நடிகர் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார். அத்துடன் உத்தரப்பிரேத முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ரஜினிகாந்த் இன்று மாலை ஜெயிலர் படம் பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.