சத்தமில்லாமல் உதவி செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!

சத்தமில்லாமல் உதவி செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!

சத்தமில்லாமல் உதவி செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !!
X

ஊரடங்கு அமலில் இருப்பதால் , பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சினிமா துறையில் உள்ளவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா துறையில் உள்ள பல்வேறு துறைகளில் பொருளாதார பாதிப்பு ஓங்கி நிற்கிறது. தற்போது கொரோனா நிதிக்காக பல்வேறு பிரபலங்களும், தொழிலதிபர்களும் உதவி செய்து வருகிறார்கள். பெப்சி சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களுக்கு திரையுலகினர் உதவி செய்து வருகின்றனர்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் உள்ள 2 ஆயிரத்து 400 பேருக்கு 10 கிலோ அரிசி, பருப்பு,சர்க்கரை, உளுந்து, புளி, மிளகாய் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஒரு கிலோ வீதம் வழங்கி உதவி செய்துள்ளார்.

இதனால் பலரும் உதவி பெறுகின்றனர். இந்த உதவிக்கு சங்கத்தை சேர்ந்த தலைவர் ஆர்.கே செல்வமணி மற்றும் பொதுச் செயலாளர் ஆர்.வி உதயகுமார் அவர்கள் நாங்கள் கேட்காமலே இயக்குனர் குடும்பங்களுக்கு உதவி செய்ததற்கு நன்றி என்று தெரிவித்திருக்கின்றனர்.

Newstm.in

Next Story
Share it