சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி..!
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ரஜினி திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக மருத்துவமனையில், ரஜினி நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். அதற்கான பரிசோதனை நடந்து வருவதாகவும், விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.