கோவையில் சூப்பர்ஸ்டார் ரஜினி! அடுத்த 20 நாள் கோவை - கேரளா எல்லை பகுதியில் ஜெயிலர் 2 பட ஷூட்டிங்!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று அவர் கோவை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
ஜெயிலர் 2 படத்திற்கு 20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவை வந்துள்ளதாக கூறிய அவர், படபிடிப்பு கோவை - கேரளா எல்லை பகுதியில் நடக்கிறது என கூறினார். படம் வெளியீடு தேதி எப்போது என்பது பற்றி தெரியவில்லை என கூறினார். அங்கிருந்து காரில் புறப்பட ரஜினிகாந்த், உள்ளிருந்து கை காண்பிக்க, அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.