அடுத்த வருஷத்துக்கு தள்ளிப்போன சூப்பர் ஹீரோ திரைப்படங்கள்..!

அடுத்த வருஷத்துக்கு தள்ளிப்போன சூப்பர் ஹீரோ திரைப்படங்கள்..!

அடுத்த வருஷத்துக்கு தள்ளிப்போன சூப்பர் ஹீரோ திரைப்படங்கள்..!
X

2009ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டுதான் மார்வல் படம் வெளியாகாது. இது ரசிகர்களை சோகத்திலும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி உள்ளது .கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான "அயன் மேன்" என்கிற திரைப்படம் மூலம் மார்வல் சினிமா உலகத்தில் பயணத்தை தொடங்கியது.

"அயன் மேன்" படத்தை தொடர்ந்து அயன் மேன் 2,கேப்டன் அமெரிக்கா ,அவெஞ்சர்ஸ் ,ஆகிய படங்கள் மார்வெல் சினிமா உடைய முதற்கட்டமாக வெளியீடுகள் ஆகும். மார்வெல் வெளியிடும் அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதன்பிறகு இரண்டாவது கட்டமான அயன் மேன் 3, கேப்டன் அமெரிக்கா, காடியன்ஸ் ஆஃ தே கேலக்ஸி, அவெஞ்சர்ஸ் 2, அண்ட் மேன் ,ஆகிய படங்கள் இடம் பெற்றன. மூன்றாம் கட்டத்தில் 12 படங்கள் வெளியாகின இதில் "பிளாக் பந்தேர்"மற்றும் "Doctor Strange" உள்ளிட்ட புதிய சூப்பர் ஹீரோக்களும் மார்வல் திரை உலகில் அறிமுகம் ஆகிறார்கள்.

2019ஆம் ஆண்டு "அவெஞ்சர்ஸ் எண்டு கேம்" வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த சூழலில் மார்வெல் நிறுவனம் நான்காவது கட்ட படங்களுக்கான வேலையை தொடங்கி உள்ளது .

இதில் "பிளாக் விடோ" ,"Doctor Strange 2"ஆகிய படங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .அதுமட்டுமின்றி "தி என்றன்ஸ்" என்கிற புதிய பட வேலையையும் தொடங்கியுள்ளது. இதில் "பிளாக் விடோ" மற்றும் "தி என்ட்ரன்ஸ்" ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உலகம் எங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் அடைக்கப்பட்டு இருப்பதால் இந்த படங்கள் வெளியாகாமல் தடையாகி வருகிறது.

இதேபோன்று 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக மார்வல் படம் வெளியாகாமல் தடையானது. அதேபோன்று தற்போதும் வெளியாகாமல் தடையாகி வருகிறது. இதனால் மார்வெல் படத்தை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாக இருந்த "பிளாக் விடோ" படம் அடுத்த ஆண்டு மே மாதம் "தி என்றன்ஸ்" என்கிற திரைப்படம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it