சூப்பர் திட்டம்..! நீங்கள் ஒரு நாளைக்கு 50 ரூபாய் டெபாசிட் செய்தால் போதும். பல லட்சம் வருமானம் கிடைக்கும்..!
முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் தனித்தனியாக ஏராளமான சேமிப்பு திட்டங்கள் தபால் நிலையங்களில் உள்ளன. ஒய்வுக்கு பிறகு சிக்கல் இல்லாத எதிர்கால வாழ்விற்காக சரியான வழியில் டெபாசிட் செய்வது அவசியம். இதற்காக ஒருவர் சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும்.
கிராம் சுரக்ஷா யோஜனா என்பது கிராமின் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த காப்பீட்டுத் திட்டம் கடந்த 1995ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்காக தொடங்கப்பட்டது. 19 முதல் 55 வயது வரை உள்ளவர்கள் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் 10,000 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதற்கான பிரீமியம் செலுத்த பல விருப்பங்கள் உள்ளன.
இத்திட்டத்துக்கான பிரீமியம் தொகையை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுதோறும் செலுத்தலாம். இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு நாளைக்கு ரூ. 50 முதலீடு செய்தால் உங்களுக்கு ரூ.35 லட்சம் வரை லாபம் கிடைக்கும். கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் நீங்கள் 19 வயதில் முதலீடு செய்தால், 60 வயது வரை முதலீடு செய்யும்போது ரூ. 34.60 லட்சம் லாபம் கிடைக்கும். இத்திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் ரூ.65 போனஸ் வழங்கப்படும். ஒருவர் 19 வயதில் ரூ.10 லட்சத்துக்கு இத்திட்டத்தில் பாலிசி எடுத்தால், 55 ஆண்டுகளுக்கு பிரீமியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 செலுத்த வேண்டும். 58 ஆண்டுகளுக்கு ரூ.1,463, 60 ஆண்டுகளுக்கு ரூ.1,411 பிரீமியம் மாதந்தோறும் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் முதலீட்டாளர் 55 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக 31.60 லட்சம் ரூபாயும், 58 ஆண்டுகளுக்கு பிறகு 33.40 லட்சம் ரூபாயும் மற்றும் 60 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.34.60 லட்சமும் பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெறும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இன்றைய காலத்தில் நிறையப் பேர் முதலீடு செய்கின்றனர். 2020ஆம் ஆண்டில் கொரோனா பிரச்சினை வந்தபிறகு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் மக்கள் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அதுவும் தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் ஆர்வத்துடன் முதலீடு செய்கின்றனர்.