1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர் திட்டம்..! இனி கேதார்நாத் செல்ல 9 மணி நேரம் பயணத்தை 36 நிமிடங்களாக குறைகிறது..!

Q

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
பர்வத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாக ,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கேதார்நாத் மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் ஆகிய இரு ரோப் கார் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு ரூ.6,800 கோடிக்கு மேல் செலவாகும்.
12.9 கி.மீ., நீளம் கொண்ட சோன்மார்க்- கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு ரூ.4,081 கோடிக்கும் மேல் செலவாகும். தற்போது இந்த தொலைவை கடக்க பக்தர்களுக்கு 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. ரோப் வே அமைக்கப்பட்டால், பக்தர்கள் வெறும் 36 நிமிடங்களில் கேதார்நாத் சென்று விட முடியும்.
12.4 கி.மீ ஹேம்குண்ட் சாஹிப் ரோப்வே திட்டத்திற்கு ரூ.2,730 கோடி செலவாகும்.
இரண்டு திட்டங்களும் பர்வத்மாலா பரியோஜனாவின் ஒரு பகுதியாக இருக்கும்.
இந்த திட்டம் ஆஸ்திரியா மற்றும் பிரான்சின் நிபுணர்களின் உதவியுடன் முடிக்கப்படும்.
இவ்வாறு அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Trending News

Latest News

You May Like