1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர் திட்டம்..! ஒரே ஒரு முறை முதலீடு மாத மாதம் ரூ. 5,550 வருமானம்..!

1

இந்தியாவில் உள்ள எவரும் தபால் நிலையங்களில் சேமிப்பதற்காக கணக்கைத் ஆரம்பிக்கலாம். அத்துடன் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் சூப்பரான திட்டங்களும் போஸ்ட் ஆபிஸில் உள்ளன.

அந்த வகையில் தபால் நிலையங்களில் உள்ள சிறப்பான சேமிப்பு திட்டம் ஒன்று பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம். அஞ்சல் அலுவலக முதலீட்டுத் திட்டங்களுக்கு பிரிவு 80C மற்றும் பிற பிரிவுகளின் கீழ் அதிகப்படியான வரிச் சலுகைகளாக கொடுக்கப்படுகின்றன. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்களுக்கு வங்கிகளை விட அதிகளவில் வட்டி கிடைக்கும்.
 

தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ இத்திட்டத்திற்கான கணக்கைத் திறக்க முடியும். வெறும் 1000 ரூபாயில் முதலீட்டில் கணக்கைத் திறக்கலாம். தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கிற்கு அதிகபட்சமாக 15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த டெபாசிட்டிற்கு பின் எவ்விதமான முதலீடும் செய்ய வேண்டியதில்லை. இத்திட்டத்திற்கு முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் 5 ஆண்டு காலத்தில் முதலீடு செய்யும் போது, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மாதந்தோறும் வருமானம் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் கணக்கு துவங்கிய நாளில் இருந்து முதிர்வு காலம் வரை மாத மாதம் வட்டி வருமானமாக செலுத்தப்படும்.

இத்திட்டத்திற்கு ரூ. 1.50 லட்சம் வரையில் வரி சலுகைகள் உண்டு. ஒவ்வொரு நிதியாண்டிற்கும் இது கிடைக்கும். போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்யும் போது, மாத வருமானமாக ரூ. 3,083 பெற முடியும். 5 ஆண்டுகளுக்கு இந்த வருமானம் கிடைக்கும்.

அதிகபட்சமாக ரூ. 9 லட்சம் டெபாசிட் செய்யும் போது மாத வருமானம் 5 ஆண்டுகளுக்கு ரூ. 5,550 கிடைக்கும். அதுவே கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சத்தை முதலீடு செயயும் போது 5 வருடங்களுக்கு மாத வருமானமாக ரூ. 9250 தொகையை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like