1. Home
  2. தமிழ்நாடு

வெளியான சூப்பர் நியூஸ்..! ரூ. 1 கோடி வரை கடன்.. 30% மானியம்..!

1

தமிழ்நாடு அரசு முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் குறித்தான ஹேப்பி நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னாள் இராணுவ வீரர்களின் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் இந்த திட்டம் குறித்தான அறிவிப்பை வெளியிட்டார். ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், பணியின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் துவங்குவதற்கு ரூ. 1 கோடி கடன் பெறலாம். அத்துடன் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற்று துவங்கப்படும் தொழில்களுக்கு கடன் தொகையில் 30 சதவீத மானியமும் கிடைக்கும். அத்துடன் 3 சதவீத வட்டி மானியமும் பயனாளர்கள் பெறலாம்.

இந்நிலையில் முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு மகிழ்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கடந்த சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் துவங்க ரூ.1 கோடி வரை கடன் உதவி வழங்குவதற்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும். 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இவர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

இந்த திட்டத்திற்கு www.exwel.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்த வாரிசுகள், கைம்பெண்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like