சூப்பர் அறிவிப்பு..! பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000..!

* ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.
* ரூ.125 கோடியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ளப்படும்.
* சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும். 30 இடங்களில் ஒரு மையத்துக்கு தலா ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ரூ.50 கோடியில் வியன் திறன்மிகு மையம் அமைக்கப்படும்.
* கோவை - சூலூர், பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமிகண்டக்டர் இயந்திரத் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
* ரூ.350 கோடியில் கோவளம் உப வடிநிலத்தில் புதிய நீர்த்தேக்கம் கட்டப்படும்.
* ரூ.11,721 கோடியில் புதிய புனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும். இவற்றில் வெள்ளிமலை - 1,100 மெகாவாட் திறன் ஆழியாறு - 1,800 மெகாவாட் திறன் கொண்டதாக இருக்கும்.
* 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்.
* கடல்சார் வள அறக்கட்டளை - ரூ.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
* 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி மேற்கொள்ளப்படும்.
* ரூ.70 கோடியில் 700 டீசல் பேருந்துகள் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்கப்படும்.
* ரூ.1 கோடியில் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். இவற்றில் சென்னை: 950, மதுரை: 100, கோயம்புத்தூர்: 75 பேருந்துகள் இயக்கப்படும்,
* ரூ.100 கோடியில் சென்னை அறிவியல் மையம் அமைக்கப்படும்.
* விண்வெளித் தொழில்நுட்ப நிதி - ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
* ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
* ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
புதிய வேலைவாய்ப்புகள்: * ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
* 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 5,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
* ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
* ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 செயல்படுத்தப்படும்.
* முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம், அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்.
* 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.
* ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
* ரூ .100 கோடியில் சென்னை, கோயம்புத்தூரில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் உருவாக்கப்படும்.
* ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
* ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
* ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.