வயதானவர்களுக்கு சூப்பர் திட்டம் : இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் சுமார் ரூ. 30,000 வருமானம் பெறலாம்..!
ஓய்வு காலத்திற்குப் பிறகு வழக்கமான வருமானத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் சுமார் ரூ.30,000 வருமானம் பெறலாம். ஓய்வு காலத்திற்கு பிற வழக்கமான வருமானம் பெற உதவும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதங்களும் அதிகமாக உள்ளன. அவற்றின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். எனினும், முதிர்வுக்குப் பிறகு அவற்றை, நீங்கள் விரும்பும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
SCSS: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) வைப்புத்தொகையின் அதிகபட்ச வரம்பை அரசாங்கம் ரூ.30 லட்சமாக உயர்த்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதம் தற்போது 8.02 சதவீதமாக உள்ளது. இது காலாண்டு அடிப்படையில் முதலீட்டாளரின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
அதிகபட்ச வைப்புத்தொகை: ரூ.30 லட்சம்
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.02 சதவீதம்
முதிர்வு காலம்: 5 ஆண்டுகள்
காலாண்டு வட்டி: ரூ.60,150
மாதாந்திர வட்டி: ரூ.20,050
ஆண்டு வட்டி: ரூ.2,40,600
5 ஆண்டுகளில் கிடைக்கும் மொத்த வட்டி: ரூ.12,03,000
POMIS: மாதாந்திர வருமானத் திட்டம்
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்திற்கான (POMIS) ஒரு நபர் கணக்கில் வைப்புத்தொகையின் அதிகபட்ச வரம்பு ரூ.9 லட்சம். நீங்கள் உங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கைத் திறந்தால், இந்த வரம்பு ரூ.15 லட்சம். இந்தத் திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவீதம். இதில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கான வருடாந்திர வட்டி 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அது ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிற்கு வந்து சேரும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள், ஆனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வட்டி விகிதத்தின்படி நீட்டிக்கப்படலாம்.
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 7.4 சதவீதம்
கூட்டுக் கணக்கிலிருந்து அதிகபட்ச முதலீடு: ரூ.15 லட்சம்
ஆண்டு வட்டி: ரூ.1,11,000
மாதாந்திர வட்டி: ரூ.9250
SCSS மற்றும் POMIS திட்டத்திலிருந்து கிடைக்கும் மாத வருமானம்
அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் மாதாந்திர வட்டி ரூ.20,050 ஆக இருக்கும். அதே நேரத்தில், மாதாந்திர வருமானத் திட்டத்தில், மனைவியின் உதவியுடன், நீங்கள் ரூ.9250 மாதாந்திர வட்டியைப் பெறலாம். இது சம்பந்தமாக, மொத்த மாதாந்திர வட்டி ரூ.29,300 (20,050 + 9250) சுமார் ரூ.30,000 என்ற அளவில் இருக்கும்.