1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர் சலுகை..! இனி சேலம் டூ பெங்களூரு வெறும் 525 ரூபாய்க்கு செல்லலாம்..!

1

ட்ரூஜெட் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு வரை சென்னை மற்றும் சேலம் இடையே விமானங்களை இயக்கி வந்தது. இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காலத்தில், விமான சேவை நிறுத்தப்பட்டது, அதன் பிறகு, எந்த சேவையும் இல்லை.

மத்திய அரசின், 'உடான் 5.0' திட்டத்தில், சேலத்திற்கு பயணியர் விமான சேவை கடந்த அக்.,16 முதல் துவங்கியது சேலம் விமான நிலையத்தில் இருந்து, அலையன்ஸ் ஏர் நிறுவனம் சார்பில் கொச்சின், பெங்களூருக்கு பயணியர் சேவை இயக்கப்படுகிறது. பெங்களூருவுக்கு, 1,500 முதல் 1,800 ரூபாய், கொச்சினுக்கு, 1,300 முதல், 1,500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சேலம் - பெங்களூருக்கு, 525 ரூபாய், சேலம் - கொச்சினுக்கு, 1,050 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சர்வீஸ் டாக்ஸ், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது. இதனால் ஆன்லைன் மூலம் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர். இச்சலுகை இம்மாத இறுதி வரை உள்ளதாக, அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் சேலம் மேலாளர் நந்தகுமார் தெரிவித்தார். 

 

Trending News

Latest News

You May Like