சூப்பர் நியூஸ்..! விரைவில் X தளத்தில் வீடியோ கால் வசதி!

ட்விட்டர் தளம் மூலம் வீடியோ கால் வசதி செய்து கொடுக்கப் போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் 1 நாளைக்கு பயனர்கள் குறிப்பிட்ட பதிவுகள் மட்டும் தான் பார்க்க முடியும் என ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். அவரின் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு எழுந்த போதும் அதைப்பற்றி அவர் அலட்டிக் கொள்ளவில்லை.
மேலும் புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணம், ட்விட்டரில் விளம்பரம் செய்து பொருளீட்டுதல் போன்ற மாற்றத்தை ஏற்படுத்தினார். அந்த மாற்றங்கள் தனித்துவம் அளித்து வணிகரீதியாக கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அதனை செய்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 24ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தின் புகழ் பெற்ற நீல நிற குருவியின் லோகோவை மாற்றி கருப்பு – வெள்ளை நிறத்தில் எக்ஸ் இஸ் லைவ்” என்ற புதிய லோகோவுடன் ட்விட்டர் தலைமையகத்தின் புகைப்படத்தை இணைத்து எலான் மஸ்க் வெளியிட்டார்.
Video & audio calls coming to X:
— Elon Musk (@elonmusk) August 31, 2023
- Works on iOS, Android, Mac & PC
- No phone number needed
- X is the effective global address book
That set of factors is unique.
இந்த நிலையில் விரைவில் ட்விட்டர் தளம் மூலம் வீடியோ கால் வசதி செய்து கொடுக்கப் போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் ட்விட்டர் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செல்லும் வசதி விரைவில் அறிமுகமாக இருப்பதாகவும் இந்த புதிய வசதிக்கு தொலைபேசி எண்கள் தேவையில்லை என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ராய்டு ஆப்பிள் உள்பட அனைத்து இயங்கு தளங்களிலும் இது செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி வந்துவிட்டால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது