1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர் நியூஸ்..! மெட்ரோ ரயிலில் நாள் முழுவதும் பயணம் செய்யும் சிறப்பு திட்டம் அறிமுகம்..!

1

சென்னையில் ஓரிடத்திற்கு விரைவாக செல்ல வேண்டுமென்றால் சென்னையில் வசிக்கும் பலரும் மெட்ரோ ரயில் பயன்படுத்துகின்றனர்.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணித்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் பயணிகளின் வருகையை அதிகரிக்க புதிய சலுகையை சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது.அதன்படி 100 ரூபாயில் நாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் சென்று வரும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.அதாவது ஒரு சுற்றுலா அட்டையை 150 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதில் வைப்புத் தொகை 50 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்படும். இந்த சுற்றுலா அட்டை ஒரு நாள் மட்டுமே செல்லும். அந்த அட்டையை திருப்பிக் கொடுக்கும் போது 50 ரூபாய் திருப்பி தரப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்திருக்கிறது.

நாளை, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களை ஒட்டி வந்திருக்கும் இந்த அறிவிப்பு மெட்ரோ பயணிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.முன்னதாக, பேடிஎம் செயலி மூலமும் டிக்கெட் எடுக்கும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியது  என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like