1. Home
  2. தமிழ்நாடு

பொறியியல் படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! 232 காலியிடங்கள் அறிவிப்பு..!

Q

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன் உள்ளிட்ட பதவிகளுக்கு 232 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலையில் தொடர்புடைய பாடப்பிரிவில் பி.இ., பி.டெக்., அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பிரிலிமினரி, மெயின் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்ப கட்டணம் : ரூ. 200. பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like