இன்று விண்ணில் தோன்றும் சூப்பர் ப்ளூ மூன்! அரிய நிகழ்வைப் பார்ப்பது எப்படி?
நிலா பூமிக்கு மிக அருகில் வரும் போது, ‘ப்ளூ மூன்’ அல்லது சூப்பர் மூன் நிகழ்வு என குறிப்பிடப்படுகிறது. இரண்டும் சேர்த்து நிகழ்வது ‘சூப்பர் ப்ளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சமயத்தில் நிலா மிக பெரியதாகவும், மிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.
"சூப்பர் மூன்" என்ற சொல் முதன்முதலில் 1979 ஆம் ஆண்டில் ஜோதிடர் ரிச்சர்ட் நோலே என்பவரால் சொல்லப்பட்டது, இந்த முழு சூப்பர் மூன்கள் இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான முழு நிலவுகளாகும். அவை வழக்கத்தை விட தோராயமாக 30% பிரகாசமாகவும் 14% பெரியதாகவும் தோன்றும்.
நீல நிலவு என்பது ஒருகாலண்டர் மாதத்தில் இரண்டாவது முழு நிலவை குறிக்கிறது.
அதாவது ஒரு மாதத்தில் பூமிக்கு மிக அருகில் இரண்டு முறை நிலவு வந்தால் முதல் நிலவை சூப்பர் மூன் என்கிறோம் இரண்டாவது முறை அதை ப்ளூ மூன் என்கிறோம். அதற்காக இரண்டாவது நிலவு நீல நிலவாக தெரியாது...
வட அமெரிக்காவில் ஆகஸ்ட் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை சுமார் மூன்று நாட்களுக்கு முழுமையாகத் தோன்றும். ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலையில் சூப்பர் ப்ளூ மூன் நிலவைப் பார்க்கலாம்.
குறிப்பாக, இந்தியாவில் ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 20 அதிகாலை வரை பார்க்க முடியும். ஐரோப்பிய நாடுகளில் ஆகஸ்ட் 18 மாலை முதல் ஆகஸ்ட் 19 இரவு வரையும் பிறகு மீண்டும் ஆகஸ்ட் 20 அதிகாலையிலும் சூப்பர் ப்ளூ மூன் நிலவைக் காணலாம். ஆப்பிரிக்காவில் ஆகஸ்ட் 18 மாலை முதல் ஆகஸ்ட் 19 இரவு வரை மற்றும் ஆகஸ்ட் 20 அதிகாலை வரை பார்க்கலாம்.