1. Home
  2. தமிழ்நாடு

மீணடும் வந்தாச்சு சூப்பர் அறிவிப்பு..! ஆதார் கார்டினை இலவசமாகவே அப்டேட் செய்யலாம்..!

1

ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதனிடையே, ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.. இதற்கான காலக்கெடு பலமுறை அரசு வழங்கியிருந்த நிலையில், பொதுமக்களும், ரேஷன் கார்டு + ஆதார் கார்டினை இணைத்திருந்தனர்.

இந்நிலையில், ஆதார் எண்களைக் கொண்ட அனைத்து நபர்களும், பதிவுசெய்த நாளிலிருந்து 10 வருடங்களுக்கு ஒரு முறையாவது ஆதாரில் உள்ள ஆதார் ஆவணங்களை புதுப்பிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்..

அதனால்தான், ஆதார் கார்டினை புதுப்பிக்க ஜூன்-11 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பிறகு, செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் ஒருமுறை அவகாசமும் தரப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் கார்டு விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வற்கான கால அவகாசம் டிசம்பர் 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆதாரை புதுப்பிப்பது எதற்காகவென்றால், ஒருவரின் பெயரில் இரண்டு, மூன்று ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.. அதனால்தான், அவ்வாறான முறைகேடுகளை தடுப்பதற்காக, ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

Trending News

Latest News

You May Like