1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர் அறிவிப்பு! ரயில்வே தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு!!

சூப்பர் அறிவிப்பு! ரயில்வே தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு!!


இந்திய ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ரயில்வே தேர்வு வாரியம் (RRB) அவ்வப்போது போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. சென்னை மண்டலத்திற்கு RRB Chennai என்ற பெயரில் தேர்வு வாரியம் இயங்கி வருகிறது.

முன்னதாக ரயில்வே துறையில் காலியாகவுள்ள பொறியியல், இயந்திரவியல், மின்சாரம், தொலைத்தொடர்பு, மருத்துவமனை, பணிமனை ஆகிய பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு போன்ற பணிகளுக்கு 2019 பிப்ரவரி 23ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது.

இதற்காக பல லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் தவறுதலாக போட்டோ, கையெழுத்து உள்ளிட்டவை இடம்பெற்றிருந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் அந்த விண்ணப்பதாரர்களுக்கு தற்போது மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

சூப்பர் அறிவிப்பு! ரயில்வே தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு!!

இதற்காக சம்பந்தப்பட்ட ரயில்வே தேர்வாணைய இணையதளங்களில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஒரு இணையதள இணைப்பு வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்களது போட்டோ, கையெழுத்து ஆகியவற்றை சரியான முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஏற்கனவே விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருந்தால் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. தற்போது ரயில்வே தேர்வாணைய தேர்வு முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளிப்படைத்தன்மை உடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் அறிவிப்பு! ரயில்வே தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு!!

மேலும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் அதிகாரப்பூர்வமற்ற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like