சன்னி லியோனுக்கு அரசின் மகளிர் உதவித்தொகை...!
சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மகாதரி வந்தன் திட்டம் என்ற பெயரில் மகளிருக்கு மாதந்தோறும் அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நடிகை சன்னி லியோன் பெயரில் பஸ்தார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 10 மாதங்களாக பணம் பெற்று வந்தது தெரியவந்துள்ளது.
அந்த நபர் தனது பெயர் சன்னி லியோன் என்றும், கணவர் பெயர் ஜானி சின்ஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
திட்டத்தின் பயனாளிகள் தகுதியானவர்கள் தானா என அதிகாரிகள் இரண்டு முறை சரிபார்த்த பின்னரும் சன்னி லியோன் பெயர் நீக்கப்படவில்லை என்ற தகவல் அம்பலமாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.