1. Home
  2. தமிழ்நாடு

மூன்றாவது முறையாக சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு..!

1

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார். இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். 

அதன்படி இவரது முதல் பயணம் 2006-ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது. இதன் மூலம் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள அவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.  

தற்போது 3-வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார். இவருடன் ஸ்டார்லைனர் வில்லியம்ஸ் (58), புல்ச் வில்மோர் ஆகியோரும் செல்ல இருந்தனர். இதற்காக, போயிங் நிறுவனம் தயாரித்துள்ள விண்கலம் மூலம் கடந்த மே மாதம் 7-ம் தேதி சர்வதேச விண்வெளிக்கு புறப்படுவதாக இருந்தது. 

ஆனால், விண்கலம் ஏவப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் தொழில்நுட்ப பிரச்சனையால், இந்த பயணம் திடீரென நிறுத்தப்பட்டதாக நாசா அறிவித்தது.  இதையடுத்து மீண்டும் நேற்று முன்தினம் புறப்படுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. 

இதன் மூலம் மூன்றாவது முறையாக விண்வெளிக்கு மேற்கொள்ளவிருந்த சுனிதா வில்லியம்ஸின் சாதனை பயணம் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like