1. Home
  2. தமிழ்நாடு

குன்னூரில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்திப் பூக்கள் !

குன்னூரில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்திப் பூக்கள் !


குன்னூர் பகுதியில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்திப் பூக்களை சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் பச்சை ரோஜா, டேலியா, மேரிகோல்ட், லில்லி, ஜெர்பூரா மற்றும் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் உள்ளிட்டவை பூக்கின்றன. தற்போது மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு செல்லும் சாலையில் காட்டு சூரியகாந்தி பூக்கள் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பூத்துக் குலுங்குகின்றன. இந்த வழியாக வாகனத்தில் செல்பவர்களுக்கு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இந்த பூக்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆங்கிலேயர் காலத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன. வாசமில்லா இம்மலர்கள் மழைக்காலங்களைத்தவிர வறட்சியான காலங்களிலும் பூத்து குழுங்கும் தன்மையுடையது.

இந்த பூக்களின்செடிகள் நிலச்சரிவைக் கட்டுப்படுத்துவதுடன், மண்ணின் உறுதித்தன்மையை அதிகரிக்கிறது. தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்தப் பூக்களைக் கண்டு மிகவும் ரசித்து வருகின்றனர். மேலும், தங்களது செல் போனில் விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like