1. Home
  2. தமிழ்நாடு

போதை பொருளுடன் சுந்தரி சீரியல் நடிகை மீனா கைது..!

1

தமிழ் டிவி சீரியல்கள் சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் சுந்தரி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. இதையடுத்து இந்த தொடரில் நடித்து வரும் துணை நடிகையான மீனா என்பவரை போதை பொருள் வைத்திருந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் டெடி உள்ளிட்ட சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை மீனா போதை பொருளான மெத்தபெட்டமைன் வாங்கி, விற்று வருவதாக நுண்ணறிவு பிரிவில் இருக்கும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நடிகை மீனாவை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். இதையடுத்து, சென்னை ராயாப்பேட்டை பகுதியில் உள்ள மால் அருகே போதை பொருள்களை நடிகை மீனா விற்று வருவது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக உஷாரான போலீசார் மீனாவை போதை பொருள் வைத்திருக்கும்போது சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.அவரிடமிருந்து 5 கிராம் அளவில் மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான மீனா போதை பொருள்கள் விற்பதை வழக்கமாக கொண்டுள்ளாராம். டிவி சீரியல்கள் மட்டுமல்லாமல் சினிமாக்களிலும் நடித்து வரும் இவர், சினிமா நடிகர்கள் பலருக்கு மெத்தபெட்டமைன் போதை பொருளை சப்ளை செய்துள்ளாராம். ஒருவரிடத்திலிருந்து போதை பொருளை வாங்கி இன்னொருவரிடத்தில் அதிக விலைக்கு அவர் விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவலறிந்த நுண்பிரிவு போலீசார் மீனாவிடம் போதை பொருள் வாங்குவது போல் பேசி, அவரை வரவழைத்து பிடித்துள்ளனர். தொடர்ந்து மீனாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் மெத்தபெட்டமைன் யாரிடம் வாங்குகிறார், எங்கிருந்து அவை வருகின்றன மற்றும் போதை பொருளை யாருக்கெல்லாம் சப்ளை செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மீனாவிடம் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் சிக்குவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like