ஆகஸ்டில் தவெக மாநாடு..! செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் சுற்றுப்பயணம்..!

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
* ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு; செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் சுற்றுப்பயணம்.
* சட்டசபை தேர்தலில் தமிழக முதல்-அமைச்சராக தலைவர் விஜயை வெற்றியடைய செய்யவேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மத்திய அரசு கேட்டுப்பெற வேண்டும்.
* 2026 சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய். தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்.
* தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம்.
* பாஜக அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பை ஏற்க முடியாது: தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும்.
கூட்டம் முடிவில், கூட்டணி மற்றும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார். செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து தவெகவின் அடுத்த கட்ட நகர்வு தொடங்க இருக்கிறது.