1. Home
  2. தமிழ்நாடு

சுஹாசினி தந்தை சாருஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!

Q

மகேந்திரன் இயக்கத்தில் கடந்த 1979-ம் ஆண்டு வெளிவந்த உதிரிப் பூக்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் சாருஹாசன். இவர் நடிகராக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர வேடம் என 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 

நடிகர் சாருஹாசனுக்கு மூன்று மகள்கள், அதில் ஒருவர் தான் சுஹாசினி. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக கொடிகட்டிப்பறந்த சுஹாசினி பின்னர் இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். சாருஹாசன் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் புதிய சங்கமம், ஐபிசி 215 ஆகிய இரு திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் தாதா 87 மற்றும் ஹரா ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. 93 வயதிலும் நடித்து வந்த சாருஹாசன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன் தந்தையை கட்டியணைத்தவாரு புகைப்படம் எடுத்துக்கொண்ட சுஹாசினி, அதை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, என்னுடைய தந்தைக்கு மருத்துவ வெக்கேஷன், மருத்துவர்கள், நர்ஸுகள் மற்றும் மகள்களின் கவனிப்புடன் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார் என பதிவிட்டுள்ளார். 

Trending News

Latest News

You May Like