1. Home
  2. சினிமா

#BIG NEWS : ’புது நெல்லு புது நாத்து’ படம் வெளியான அதே தேதியில் தயாரிப்பாளர் மரணம்..!!

#BIG NEWS : ’புது நெல்லு புது நாத்து’ படம் வெளியான அதே தேதியில் தயாரிப்பாளர் மரணம்..!!

புது நெல்லு புது நாத்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், இயக்குநர் பாரதிராஜாவின் நண்பருமான சி.என். ஜெய்குமார் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

கடந்த 1991-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் ‘புது நெல்லு புது நாத்து’. இந்த படம் மூலம் ராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிகர்களாக அறிமுகமாகினர். மறைந்த நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன் வசனம் எழுதிய இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்தார்.

இந்த படத்தை மூகாம்பிகா ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வி.இ. வடுகநாதன், சி.என். ஜெய்குமார், எம். இளவரசு உள்ளிட்டோர் தயாரித்திருந்தனர். அவர்களில் ஒருவரான சி.என். ஜெயக்குமார் இன்று காலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.

அவரது உடலுக்கு இயக்குநர் பாராதிராஜா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தனர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். புது நெல்லு புது நாத்து படம் 1991-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி வெளியானது. அந்த படத்தின் தயாரிப்பாளர் சி.என். ஜெய்குமார், இன்று மார்ச் 15, 2023 அதேநாளில் உயிரிழந்துள்ளது திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like