1. Home
  2. தமிழ்நாடு

திடீரென முடங்கிய ஜியோ.. சிக்கித் திணறிய பயனர்கள்..!

Q

ஜியோ நெட்வொர்க் கோளாறு காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 65 சதவீதம் பேருக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்று பிரச்சினையும், 19 சதவீதம் பேருக்கு மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த முடியாத சூழலும் உருவாகி இருக்கிறது. மேலும் 27 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை.
பலர் மொபைல் டேட்டா, ஜியோஃபைபர் பிராட்பேண்ட் மற்றும் தொலைபேசி இணைப்பை பயன்படுத்துவதில் சிரமத்தை சந்தித்துள்ளனர். சுமார் 54% புகார்கள் மொபைல் இணைய சேவைகள் முடங்கியதாகவும், ஜியோஃபைபர் 27% மற்றும் 19% மொபைல் போன் நெட்வொர்க் சிக்கல் கோளாறுகளை எதிரகொண்டதாகவும் எக்ஸ், இன்ஸ்டாகிராம் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

Trending News

Latest News

You May Like