1. Home
  2. தமிழ்நாடு

திடீரென மண்ணில் புதைந்த வீடுகள்.. திருவண்ணாமலையில் அரங்கேறிய சோகம்..!

1

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னரும் சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம் மற்றும் கடலூரில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டி வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வ உ சி நகரில் மண் சரிவில் சில வீடுகள் மண்ணில் புதைந்தன. குறிப்பாக ஒரு பெரிய பாறை ஒன்று சரிந்து அந்த வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதையடுத்து இது குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வீடுகளில் 7 பேர் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். ராஜ்குமார் என்பவரின் வீட்டில் தான் இந்த பாறை சரிந்து விழுந்துள்ளது. வீட்டில் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா, இவர்களது குழந்தைகள் கவுதம், இனியா மற்றும் ராஜ்குமாரின் உறவினர்களின் மகன், மகள்கள் தேவிகா, வினோதினி இன்னொரு பெண் என மொத்தம் 7 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

7 பேரையும் காணாததால் அவர்கள் நிலைமை என்னவென்று தெரியவில்லை. மண் சரிவுக்கு முன்பு ராஜ்குமார் செல்போன் எண்ணில் ஒருவர் பேசியதாகவும், ஆனால் மண் சரிவு ஏற்பட்ட பிறகு ராஜ்குமார் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



 

Trending News

Latest News

You May Like