1. Home
  2. தமிழ்நாடு

திடீரென வானில் தோன்றிய மர்மமான வௌிச்சம்..! ஏலியன் இருப்பது உண்மையா..?

1

வானத்தில் தெரிந்த வெளிச்சத்தைக் காட்டும் மர்மமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியிருக்கும் நிலையில், இது ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பற்றியதா என்கிற குழப்பம் எழுந்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அந்த வீடியோ, வண்ணமயமான வெளிச்சத்தில், ஒளிரும் பந்துகள் பறப்பது போன்ற தோற்றத்தை கொண்டிருந்ததால், அது என்னவென்று யாராலும் எளிதில் விளக்க முடியாதது போல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது வேற்று கிரகவாசிகளின் வருகை மற்றும் அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் பற்றிய சர்ச்சைக்குரிய விவாதங்களையும் தூண்டியிருக்கிறது.

மேலும், தெளிவான தோற்றத்தை கொண்டிராத மற்றும் குறைந்த-தெளிவைக் கொண்ட, அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (UFO) பதிவுகளைப் போலல்லாமல், இந்த வீடியோ மிகத் தெளிவான தோற்றத்தைக் காட்டுவது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, மக்கள் தங்களது அசாத்திய கருத்துகளால் கருத்துப் பகுதியை நிரப்பி வருகின்றனர். 


 

Trending News

Latest News

You May Like