1. Home
  2. தமிழ்நாடு

100 பேர் திடீர் பணிநீக்கம்.. சுந்தர் பிச்சை எடுத்த முடிவு..!!

1

கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவில் வடிவமைப்பு அதாவது டிசைன் தொடர்பான பணிகளில் இருக்கும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. கூகுள் நிர்வாகம் தனது மொத்த வர்த்தகத்திலும் செலவுகளைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. இதன் வாயிலாக கூகுள் நிர்வாகம் அனைத்து பிரிவுகளிலும், அனைத்து மட்டத்திலும் செலவுகளை குறைக்கும் முடிவுகளை எடுத்து வருகிறது.

இந்த பணி நீக்கம் "குவாண்டிடேட்டிவ் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் ரிசர்ச்" மற்றும் "பிளாட்ஃபார்ம் அண்ட் சர்வீஸ் எக்ஸ்பீரியன்ஸ்" ஆகிய அணிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு நடந்துள்ளது என அறிவித்துள்ளது. இந்த அணிகள் கூகுள் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நடைமுறை, செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தரவு, கருத்துக்கணிப்புகள் மற்றும் டிசைன் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தன.

இந்த 2 அணிகளும் கூகுளின் ப்ராடெக்ட் மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றின, ஆனால் தற்போது கூகுள் ஏஐ அடிப்படையிலான சேவையில் அதிகம் கவனம் செலுத்தும் காரணத்தால் இப்பிரிவில் அதிகப்படியாக இருக்கும் ஊழியர்களை பணிநீக்க செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த இரு பிரிவின் பணிநீக்கம் மூலம் பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிலும் சில பிரிவுகளில் 50 சதவீத ஊழியர்கள் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like