1. Home
  2. தமிழ்நாடு

திடீரென எடுத்த வாந்தி..பெண் சிறப்பு எஸ்ஐ மரணம்..!

1

செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஜெயசித்ரா (49).

இந்த நிலையில். நேற்று இவர் தபால் பணியாக தடய அறிவியல் துறை பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

பிறகு அயனாவரத்தில் வசிக்கும் தனது சகோதரி பாண்டிசெல்வி வீட்டிற்கு சென்று அவருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது ஜெயசித்ரா திடீரென வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனால் பதறிப்போன அவரது சகோதரி உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

அங்கிருந்த மருத்துவர், ஜெயசித்ராவுக்கு சுகர் அளவு அதிகமாக உள்ளது மேலும் நாடித்துடிப்பு விகிதம் குறைவாக இருப்பதால் உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து கெல்லிசில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது ஜெயசித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அயனாவரம் போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அயனாவரம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like