புகைப்பட கலைஞர் கொலையில் திடீர் திருப்பம்.. காரணம் மனைவி அல்ல.. கள்ளக்காதல் தான் !

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தவர் தினேஷ் (33). இவரது மனைவி அனிதா (26). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தினேஷ், ஸ்டூடியோவில் இருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த 4 பேர், மறைத்து வைத்திருந்த அரிவாளால், தினேஷின் கழுத்து, தலை உள்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரை வெட்டிசாய்ந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
உடலை மீட்டு நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி தரப்பு அல்லது கள்ளக்காதல் பிரச்னையால் கொலை நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிகப்பட்டது.
ஆனால் இப்போது கள்ளக்காதல் விவகாரத்தால் கொலை நிகழ்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவி பிரிந்து சென்ற நிலையில் தினேஷ்க்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in