1. Home
  2. தமிழ்நாடு

சிக்கன் ரைஸ் வழக்கில் திடீர் திருப்பம்..!

1

நாமக்கல்லில் உள்ள ஒரு உணவகத்தில் சண்முகநாதன் என்பவரது மகன் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சென்றுள்ளார். மகன் வாங்கி கொடுத்த சிக்கன் ரைஸை ஆசையாக சண்முகநாதன் மற்றும் நதியா என்பவர் சாப்பிட்டுள்ளனர். இதையயடுத்து சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போக, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர் . தீவிர சிகிச்சை பிரிவில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சண்முகநாதன்(72) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உணவகத்தில் மகன் பார்சல் வாங்கி வந்த சிக்கன்ரைசை சாப்பிட முதியவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தனது தாய் மற்றும் தாத்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என தான் சிக்கன் ரைஸ் வாங்கிய ஹோட்டல் மீது பகவதி புகார் அளித்த நிலையில், ஹோட்டல் சீல் வைக்கப்பட்டது. மேலும், ஹோட்டல் உரிமையாளர் ஜீவாநந்தனிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பகவதியின் தாய் மற்றும் தாத்தா தவிர மற்றவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத நிலையில், பகவதியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த விவகாரத்தில், சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது அம்பலமாகியுள்ளதால் இந்த விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்தது தடயவியல் சோதனையில் அம்பலமாகி உள்ளது.
விசாரணையில் சிக்கன் ரைஸில் பூச்சிமருந்தை கலந்தது, இறந்து போன தாத்தாவின் பேரன் தான் என்பது தெரிய வந்துள்ளது. நாமக்கலை சேர்ந்த பகவதி சமீபமாக தவறான நடத்தையுடன் இருந்து வந்ததை அவரது தாத்தாவும், தாயும் கண்டித்துள்ளனர். இதனால் அவர்களை கொல்வதற்காக சிக்கன் ரைஸ் வாங்கி அதில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்துள்ளார் பகவதி. இதில் பகவதியின் தாத்தா பரிதாபமாக பலியான நிலையில் தாய் நதியா தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Trending News

Latest News

You May Like