ஞானசேகரன் விவகாரத்தில் திடீர் திருப்பம்..! கோயில் நிலத்தில் வீடு கட்டிய ஞானசேகரன்..!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் ஒரு காதலனுடன் பேசிக் கொண்டிருந்தபோது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். முன்னதாக ஞானசேகரன் வீட்டில் மேற்கொண்ட ஆய்வில் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பில் ஆபாச வீடியோக்கள் அதிகமாக இருப்பதாகவும், ஆபாச படங்களை பார்த்து ரசித்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் பழக்கம் கொண்டவர் ஞானசேகரன் என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே கோட்டூர்புரத்தில் ஞானசேகரன் வீட்டிலும் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல்வேறு ஆவணங்கள், லேப்டாப், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஞானசேகரன் செல்போனில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும், லேப்டாப்பிலும் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததால் அது பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ஞானசேகரன், கோயில் நிலத்தில் வீடு கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டூர் ஏரிக்கரை தெருவில் கோயில் நிலத்தில் 2 மாடி வீடு கட்டியிருப்பதாக வருவாய்த்துறையினர் ஆய்வில் புதிய தகவல் வெளியிட்டுள்ளது.