திடீர் திருப்பம்..! இளைஞர் அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது பணமோசடி புகார்..!

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா மீது பண மோசடி வழக்கு உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் வரை மோசடி செய்ததாக நிகிதா மீது 2011ம் ஆண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010ல் துணை முதல் அமைச்சர் உதவியாளரை தனக்கு தெரியும் என கூறி நிகிதா பண மோசடி செய்துள்ளார்.
பணத்தை கொடுத்தவர்கள் திருப்பிக்கேட்டபோது நிகிதா குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக நிகிதா மீதும் அவரது குடும்பத்தினர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.