பெண் கொலையில் திடீர் திருப்பம்.. உல்லாசத்திற்கு பின் வெறிச்செயலில் ஈடுபட்ட கள்ளக்காதலன் !

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விழுக்கம் கிராமத்தில் கன்னியம்மாள் வசித்து வந்தார். கணவன் பிரிந்து சென்றதால் அக்கிராமத்தில் தனி வீட்டில் இருந்தார்.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி இரவு கன்னியம்மாள்(49) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலையில் அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் அப்பகுதியினர் சென்று பார்த்தப்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
விசாரணையில், அப்பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கன்னியம்மாளின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்த செண்ட்ரிங் தொழிலாளியான சரவணன் என்பவருடன் கடைசியாக பேசியது தெரியவந்தது.
மேலும் சரவணனின் தொலைப்பேசி எண் சிக்னல், கன்னியம்மாள் கொலை செய்யப்பட்ட அன்று அப்பகுதியில் இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சரவணனை அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்ததில் கன்னியம்மாளுக்கும் சரவணனுக்கும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் கொலை நடந்த அன்று கன்னியம்மாளுடன் தனிமையில் உல்லாசமாக இருந்தபின்பு, கன்னியமாள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை தருமாறு சரவணன் கேட்டுள்ளார்.
அதற்கு கன்னியம்மாள் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சரவணன், முகத்தில் தலையணை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் கன்னியம்மாளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்து கொண்டு அச்சிறுப்பாக்கம் வந்ததாக போலீசாரிடம் அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சரவணனிடம் இருந்து 3 சவரன் தங்க சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
newstm.in