விரைவு ரெயிலில் திடீர் புகை : அலறியடித்து ஓடிய பயணிகள்..!

அசாமில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ரூகர் - கன்னியாகுமரி விரைவு ரெயிலில் திடீரென புகை ஏற்பட்டது. ஒடிசாவில் பிரம்மாபூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது புகை வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். ரெயிலில் இருந்து புகை வந்ததால் அலறியடித்துக்கொண்டு பயணிகள் கீழே இறங்கி ஓடினர்.
புகை வந்தவுடன் ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தீ பிடிக்காமல் தவிர்க்கப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ரெயிலில் பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு நிலைமை சீரான பிறகு ரெயில் மீண்டும் புறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
Smoke witnessed in one of the coaches of Dibrugarh-Kanyakumari Vivek Express near Odisha’s Brahmapur Station due to brake binding as a sack got stuck in the wheel of a coach. The train halted for around 15-30 minutes and later resumed its service after repair works. pic.twitter.com/46GSLVArdx
— OTV (@otvnews) July 11, 2023