மின் கட்டணம் திடீர் உயர்வு.. அரசு அதிரடி அறிவிப்பு..!

மின் கட்டணம் திடீர் உயர்வு.. அரசு அதிரடி அறிவிப்பு..!

மின் கட்டணம் திடீர் உயர்வு.. அரசு அதிரடி அறிவிப்பு..!
X

வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட் வரை ரூ.1.56 காசிலிருந்து ரூ.1.90 காசுகளாக உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வீட்டு உபயோக மின் கட்டணம் மட்டுமில்லாமல் விவசாயிகளுக்கான மின் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் விலை உயர்ந்துள்ளதை அடுத்து மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, 100 யூனிட் வரையிலான மின் கட்டணத்தை ரூ.1.55 காசிலிருந்து ரூ.1.90 காசுகளாகவும், 101 முதல் 200 யூனிட் வரையிலான மின் கட்டணத்தை ரூ.2.60 காசிலிருந்து ரூ.2.75 காசுகளாகவும் புதுச்சேரி அரசு உயர்த்தியுள்ளது. இதேபோன்று சிறு விவசாயிகளுக்கு நிரந்தர கட்டணம் ரூ. 11-லிருந்து ரூ.20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் விலை உயர்ந்துள்ளதை அடுத்து மின் கட்டணமும் அதிகரித்துள்ளது. மற்ற விவசாயிகளுக்கு நிரந்தர கட்டணம் ரூ.50 லிருந்து ரூ.75-ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Next Story
Share it