நீயா நானாவால் டிரெண்டான இளைஞர் திடீர் மரணம்..! "என் பையன் 25 தோசை சாப்பிடுவான்"
’நீயா நானா’ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ’தோசை சாப்பிட வேண்டிய உணவு’ என ஒரு தரப்பு, ’தோசை ஒரு சாதாரண உணவு’ என்று இன்னொரு தரப்பு விவாதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது.தனது மகனுக்கு தோசை என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், 25 தோசை சாப்பிடுவார் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்த குடும்பம் பிரபலமான நிலையில் சில யூடியூப் சேனல்களுக்கும் இவர்கள் பேட்டி அளித்திருந்தார்கள்.
கோபிநாத்தே, யாருப்பா அந்த மனுஷன் எனக்கே அவனை பார்க்கணும் போல இருக்கு என சொல்லியிருப்பார். அந்த ஷோவின் மூலம் டிரெண்டானவர் தான் பிரணவ். நீயா நானா மூலம் பிரபலமான அந்த பிரணவ் தான் தற்போது இரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குரோம்பேட்டை இரயில் நிலையத்தில் கடந்த வாரம் புதன்கிழமை அன்று, இரவு 10.30 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது 22 வயதாகும் பிரணவ் தின்சுகியா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். மொபைல் போனில் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அவரோடு தண்டவாளத்தை கடக்க முயன்ற சதீஷ் என்பவரும் இந்த விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது.