இன்று மதியம் 1 மணி முதல் அமல்.. திடீர் அறிவிப்பு !!

இன்று மதியம் 1 மணி முதல் அமல்.. திடீர் அறிவிப்பு !!

இன்று மதியம் 1 மணி முதல் அமல்.. திடீர் அறிவிப்பு !!
X

சேலம் மாவட்டம் முழுக்க இன்று மதியம் 1 மணி முதல் திங்கள் கிழமை காலை வரை, 2 நாட்கள் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக அந்த மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்துள்ளார்.

மருத்துவமனை மற்றும் மருந்தகங்கள் போன்றவற்றைத் தவிர, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்துமே 2 நாட்களுக்கும் மூடப்பட்டு தான் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் மூலம் வீடு வீடாக காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்றும் ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் மீறி ஏதாவது காரணம் சொல்லி கொண்டு வெளியே வருவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூக பரவல் என்ற நிலையை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newstm.in

Next Story
Share it