இப்படி ஒரு திறமையா... கொதிக்கும் எண்ணையில் அசால்ட்டாக கைவிடும் பெண்.. ஆச்சரிய வீடியோ !

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஒருசில வீடியோக்கள் வெளியாகி சர்வதேச அளவில் பேசப்படும். அதில் வன உயிரினங்கள் தொடர்பான வீடியோக்கள் இடம்பெறும் அல்லது ஒருவரின் அசாத்திய சாதனை, சாகசம் தொடர்பான வீடியோ இடம்பெறும்.
அந்த வகையில் இளம்பெண் ஒருவர் தனது திறமையால் இன்று உலகளவில் பிரபலமாகியுள்ளார். சுடுதண்ணீர் கையில் பட்டாலே சூடு தாங்காமல் சுளிர் என்று கையே எடுத்துவிடுவோம்.
ஆனால் ஒரு பெண் கொதிக்கும் எண்ணெயில் பொரிக்கும் உணவுகளை வெறும் கைகளால் அசால்ட்டாக எடுக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் அசாதரணமான அந்தப் பெண்ணின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலா கிவருகிறது.
டிக்டாக்கில் வைரலான வீடியோ, அதன்பின் ஃபர்ஸ்ட் வி ஃபீஸ்ட் என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து வியந்துவருகின்றனர்.
வெறும் 13 நொடிகள் மட்டுமே வரும் இந்த வீடியோவில் ஒரு பெண் கொதிக்கும் பெரிய எண்ணெய்ச்சட்டி முன்பு நின்றுகொண்டு வெறும் விரல்களால் பொரித்த உணவுகளை எடுக்கிறார். ஆனால் அவர் கைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை.
இதனை ஆச்சரியத்துடன் அனைவரும் பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
She said tongs are for losers 😭😭😭 pic.twitter.com/QF4IaFiMd7
— First We Feast (@firstwefeast) October 26, 2020
newstm.in