தக்காளிக்கு இப்படி ஒரு மௌவுசா..! தக்காளியை பாதுகாக்க தோட்டத்துக்கு சிசிடிவி கேமரா..!

தக்காளியின் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வருகிறது. கடைகளில் சில்லறை விற்பனையில் 1 கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக மக்கள் தக்காளி விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கடந்த சனி கிழமை கோயம்பேடு மார்க்கட்டில் 600 டன் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டதால் தக்காளியின் விலை 20 ரூபாய் வரை குறைத்து விற்பனை செய்யப்பட்டது. இந்த தக்காளியின் விலை அதிகரிப்பால் தக்காளியை பயிரிட்ட விவசாயிகளுக்கு பணமழை கொட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, தக்காளியை பயிரிட்ட சில விவசாயிகள் தக்காளி திருடுவதனை தடுக்க இரவு முழுவதும் காவல் காத்தனர்.
தற்போது மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்ஹஞ்ச் நகர் வலுஜா கிராமத்தை சேர்ந்த விவசாயி சரத் ரவெட் விளைநிலத்தில் தக்காளியை சிலர் திருடுவதை அறிந்து அவரின் நிலைத்தில் 22 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தன் விளைநிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.