1. Home
  2. தமிழ்நாடு

பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!

பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை!


இந்திய எல்லைப் பிரச்சனையில் உருவான மோதலை அடுத்து நாட்டின் பாதுகாப்பை மேலும் பலபடுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்திய விமானப் படைக்கு வலுசேர்க்க வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் சூப்பா் சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்திய விமானப்படை இது குறித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய விமானப் படைத் தளத்துக்குச் சொந்தமான எஸ்யூ-30 எம்கேஐ விமானம்,பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணையை தாங்கிச் சென்றது.சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக அந்த விமானம் பயணித்து தொலைதூரம் சென்ற பின், ஏவுகணை செலுத்தப்பட்டது.

மேலும் வங்கக் கடலில் நிறுவப்பட்டிருந்த இலக்கை பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது. இந்த ஏவுகணையை நிலம் அல்லது கடல் எங்கேயிருக்கும் இலக்கையும் துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது. மோசமான வானிலையிலும் இலக்கைத் தாக்கி அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Trending News

Latest News

You May Like